திங்கள், 23 ஆகஸ்ட், 2010

பல்லக்கு தூக்க வேண்டாம்.

இடதுசாரி என்று சொன்னாய்.
இடது சரிவு ஏன் ஆனாய்?
ஐ.மு.கூ. வில் சேரவில்லை.
ஆனால் வெளியில் இருந்து
ஆதரவு தந்தோம் என்றாய்.
அதாவது பல்லக்கு தூக்கினோம்
என்று வெட்கத்தால் சொல்லவில்லை.
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில்
கையெழுத்து போடாதே என்றாய்
நாடு போற்றியது. வெளியே
வந்தோம் என்றாய். நல்லது
என நாடு சொன்னது.
இப்போ அணு விபத்து இழப்பீடு
மசோதா என்றான். மாறி,மாறி
அமெரிக்க நிறுவன காப்பாற்று
அம்சங்களை சேர்க்கிறான்.
ஐயோ மாட்டோம் என்கிறாய்.
அப்படியானால் நான் தூக்குகிறேன்
பல்லக்கு என்கிறான் பா.ஜ.க.
பல்லக்கு தூக்க ஆள் மாறுது
பல்லக்கு மாறலை. சாமிசிலை
மாறலை. பல்லக்கு தூக்கி
பழக்கப்படுத்தியது யார்?
நீதானே? நீ எப்படி இடதுசாரி?
இடது சரிவுதானே?

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

ஏன் இப்படி ஆயிட்டீங்க?

கோவையில் அவர் கூட்டினார்.
உங்கள் செம்மொழி கூட்டத்திற்கு
பதிலாகத்தானே. அப்புறம் என்ன
கோவையில் நீங்கள் மீண்டும்...?
சொதப்பலாகிபோச்சே..........
சரி. அவர் திருச்சியில் இப்போ
கூட்டினார். நீங்களும் ஏன் அங்கே
போகணும்? நீங்க ஏன் அந்த அம்மா
பின்னாலேயே போறீங்க?
நாங்க உங்க பின்னாலே
எப்படி வர முடியும்?
அய்யா நீங்க பெரியார்,
அண்ணா வழின்னு நினைச்சா
நீங்க அம்மா வழியா இல்லா
இருக்கீங்க? எஸ்.எஸ்.சந்திரன்
மாதிரி ஆயிட்டீங்களே?

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

கடிதம் எழுதுவதை நிறுத்திவிடு.

கடிதம் எழுதும் கதாநாயகரே,
எழுதி, எழுதி எங்கள் தமிழரை
ஈழத்தில் எழச்செய்வாய் என
எண்ணினோம். ஆனால் நீங்கள்
எழுதியது என்ன என்று எங்களுக்கு
தெரிவதற்கு முன்பே எங்கள் இனம்
அங்கே அழிக்கப்பட்டதே. அதற்கா
அப்படி எழுதி தள்ளினாய்?
அய்யா கடிதம் எழுதியுள்ளார் என்று
எங்கள் சொந்தங்களிடம் சொன்னோம்.
யாரும் உங்கள் கடிதத்தின் மூலம்
ஈர்க்கப்படவில்லையே?
உங்களை ஈழத்தமிழர் நம்ப
மறுக்கிறார்களே? ஏன் தலைவா?
அவர்களுக்கு புரிந்துவிட்டதா?
எங்களுக்கு புரியாதது அவர்களுக்கு?
உங்களை நாங்கள் மட்டும்தான்
இந்த தமிழ் கூறும் நல்லுலகத்தில்
நம்பிக்கொண்டு இருக்கிறோமா?
உலகத்தமிழர்கள் எங்களை
பரிகாசம் செய்கிறார்களே?
உன்னை நம்புவதால் ஏன் இந்த
பரிகாசம் தலைவரே?
எங்களுக்கு தமிழ்நாட்டில் வேறு யார்
இப்படி தினந்தோறும் தமிழ், தமிழர்
என பேசுகிறார்கள்? அதற்காகத்தானே
நாங்கள் நம்புகிறோம்? எங்களையும்
நடுத்தெருவில் இழுத்துவிடத்தான்
உன் கடிதங்கள் உதவுமா தலைவா?
நீ இப்போது நமது மீனவர்களுக்காக
கடிதம் எழுதுகிறாயே தலைவா
வேண்டாம் நிறுத்திவிடு.
உன் கடிதங்கள் எங்கள் மீனவரை
முழுமையாக அழிப்பதற்குள்
கடிதம் எழுதுவதை நிறுத்திவிடு

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

காங்கிரசு கட்சி இரட்டை வேடம் போடுகிறதா?

காங்கிரசு கட்சி இரட்டை வேடம் போடுகிறதா?
ராமாதாஸ் சொல்றார் காங்கிரசுடன்
சேர்ந்து கூட்டணி என்று.
அது என்ன தனி கூட்டணி?
இளங்கோவன் சொல்லுறார்
ராகுல தாக்கும் தி.மு.கா.ன்னு
கலைஞர் சொல்லுறார்
தாக்காதீங்க காங்கிரசை
காங்கிரசு எந்த பக்கம்?
மூணாம் அணியா?
இப்படி பேசிவிட்டு
இரண்டாம் அணியா?
அல்லது கlai

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

அவருக்கு படிக்கத்தெரியும்.

அவர் பார்த்து படித்தாலும்,
ஒவ்வொரு கூட்டத்திலும்
படித்து காண்பித்தார்.
துணை தான் என்றாலும்,
முதல்வர் கூட்டங்களிலும்,
படித்து காண்பித்தார்.
அவர் புத்தகம் படிக்கமாட்டார்
என்று நண்பர்கள் சொன்னார்கள்.
படிக்கத்தெரியாதோ என எண்ணினோம்.
இல்லை. அவர் படித்து காண்பித்தார்.
அதிகாரி எழுதிக்கொடுத்ததைதானே
என்றனர் சிலர்.பரவாயில்லை. அவர்
படித்து காண்பித்தார்.
அவர் எழுத்து கூட்டி எண்ணிக்கை சொல்லி
படித்து காட்டினாரே. பார்த்து, பார்த்து தானே
என்றனர். அது எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டாக
இருக்கும். நாங்கள் காட்சி ஊடகத்தில்
பார்க்க அவர் படித்துக்கொண்டிருந்தாரே.
நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள்
பார்த்து படிக்கவில்லையா? அவர் மட்டும்
படிக்கக்கூடாதா? அவர் படித்து காட்டினார்.
இனி விமர்சிக்காதீர்கள்.அவருக்கு
படிக்கத்தெரியும். அவர் படிச்சு கான்பிச்சாரே

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

பதிலடி அல்ல என்றார்

கோவையில் கூட்டம்
ஜெயலலலிதா நடத்தி
இரண்டு லட்சம் பேரை
கூட்டினார் என்றது
ஊடகங்கள். மூன்றே மணி
நேரம், நகரை நிறுத்தினார்
இப்படி ஊடக ஒலிகள்
அய்யாவை அசைத்தது.
அய்யாவும் இறங்கினார்.
களத்தில் இறங்கி குஸ்தி
போட தயாரானார்.
அதே வ.உ சி. மைதானத்தில்
அதேபோல காட்சி உருவாக்க
ஏற்பாடு செய்தார். இது
அரசாங்கத்தில் இருக்கும்,
ஆளுங்கட்சியின் ஆட்டம்.
அதனால் அவ்வளவு தூரம்
மக்கள் ரசிக்க மாட்டார்கள்.
ஆனாலும் போட்டு அதன்மூலம்
தங்கள் உ.பி.க்களை உசிப்பி விட
தலைவர் விரும்பினார்.
ஆனாலும் அதை அப்படி நினைக்க
கூடாதென, இப்படி பேசினார்.
யாருக்கும் பதிலாக அல்லது
போட்டியாக இங்கே நாங்கள்
கூட்டம் போடவில்லை.
தந்தையும், மகனும், இதையே
பேசினர். அதனால்தான் மக்களுக்கு
அம்மா நினைவு தானாகவே வந்தது.

வெள்ளி, 30 ஜூலை, 2010

அப்படியே சாப்பிடலாம் அழகிரி அண்ணே

கடமலைக்குண்டு இலவச முகாம்
மருத்துவ முகாம். அதனால்தான்
அதற்கு ஹார்லிக்ஸ் போத்தல்கள்
வந்திறங்கின. திண்டுக்கல் வழி
வந்தால் என்ன? சோழவந்தான் வழி
வந்தால் என்ன? பலவீனமான
மக்களுக்கு ஹார்லிக்ஸ் வந்தது.
நாமக்கல்காரர் புகார் கொடுக்கட்டும்,
எதிர்க்கட்சி தலைவி அறிக்கை விடட்டும்.
ஹார்லிக்ஸ் போத்தல்கள் வந்திறங்கின.
ஒன்பதாயிரம் போத்தல் வந்தால்
எட்டாயிரம் மக்களுக்கு எளிதாக
விநியோகமானதே. மகிழ்ச்சிதான்.
மீதம் எங்கேன்னு கேக்காதேங்க.
மன்னனும், மந்திரியும், எங்கே?
சக்கரவர்த்திக்கு கீழேதானே?
விளம்பரம் பார்த்தோம்.அப்படியே
சாப்பிடலாம் அழகிரி அண்ணே